காஞ்சிபுரத்தை தலைமையாகக் கொண்டு செங்குந்த முதலியார் வாழும் ஊர்களை நாட்டாண்மை, பெருதனகாரர் மற்றும் காரியக்காரர் என பாவடி சபை மூலம் 72 கிளை நாடாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்செங்கோடு, சேலம், தாரமங்கலம் ஆகியவை கிளை நாடாக உள்ளது.
இருப்பினும் விஜயநகர காலமான பிற்காலத்தில் நிர்வாக வசதிக்காக எழுகரை நாடு என்னும் கூட்டமைப்பை ஏற்படுத்தப்பட்டது. இதில் செங்குந்த கைக்கோள முதலியார்கள் வாழும் சேலம் & நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
இந்த எழுகரை நாடு 7 எல்லைகளாக பிரிக்கப்பட்டு இதில் பழைமையான நகரமான திருச்செங்கோடு எழுகரை நாட்டின் 7 நாடுகளின் தலை நகராக இருந்து வருகிறது(தலைமை நாடு). சில பத்திரிக்கையில் திருச்செங்கோடு மகாநாடு என்று உள்ளது ஆனால் இது தவறு. மகாநாடு என்பது காஞ்சிபுரம் செங்குந்தர் நாட்டாமை சபை மட்டுமே
தலைமைநாடு - திருச்செங்கோடு
பூவேழ்நாடு - தாரமங்கலம்
சேலம் நாடு - சேலம்
பருத்திபள்ளி நாடு - மல்லசமுத்திரம்
இராசீபுரம் நாடு - பாச்சல்
ஏழூர் நாடு - R.85-கொமாரபாளையம்
அரைய நாடு - கபிலர்மலை
மேலே கூறப்பட்டுள்ள ஏழு நாடுகளாகிய ஒவ்வொரு நாட்டின் கீழ் 10 முதல் 20 சிறிய பாவடி வைத்துள்ள செங்குந்த முதலியார் கிராமங்கள் இருக்கும். நமக்குள் ஏற்படும் பிரச்சனைகள் சட்ட விதிகளுக்கு கிராம பாவடி பெருதனக்காரர் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் அந்தந்த நாட்டின் நாட்டாண்மையை தீர்ப்பை நாடி செல்வர் அதுவும், பிடிக்கவில்லை என்றால் எழுகரை நாடு தலைமை நாட்டாண்மை தீர்ப்பை நாடி செல்வர். இதிலும் திருப்தி இல்லை என்றால் காஞ்சிபுரம் மகாநாடு ஆண்டவர் நாட்டாண்மையிடம் சென்று முறையிட வேண்டும்.
இந்த செங்குந்த முதலியார் நாட்டாமை சபை என்பது செங்குந்த முதலியார் சமூகத்தின் வணிகத் தொழில் உதவிக்காகவும், கோவில் திருவிழா நடத்துவதற்காகவும் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தங்கள் சட்ட விதிகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்தி இருந்தது அந்த காலத்தில்.
தலைமை நாடு திருச்செங்கோடு என்று அழைக்கப்படும்.
திருக்கொடிமாடச்செங்குன்றூர் நகரமானது கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் சிறப்புமிக்கதும், திருஞான சம்பந்தர் 7ஆம் நூற்றாண்டு தேவாரப் பாடல், அருணகிரிநாதர், சங்க இலக்கியமான 2 ஆம் நூற்றாண்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலமும், அம்மையும் அப்பனும் ஓர் உருகொண்டு திருமலைமேல் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருள்பாலிக்கும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரருக்கும், அசுரரை அழித்து அமரர்களை காத்த நம் செங்குந்தர் குல தெய்வமாம் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத செங்கோட்டுவேலவருக்கும், கருணைக் கடலாம் கார்முகிழ் வண்ணனாம் அருள்மிகு ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஆதிகேசவப்பெருமாளுக்கும் கோவில் உள்ள ஊர்.
இந்த ஊரில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் சமூகம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகமாகும்.
இவ்வூர்களின் வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பு தந்த பழம்பெரும் மக்கள் பிறந்த ஊர்கள் இவையாகும்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள உரிமைகள் :
வருடம் தோறும் வைகாசி மாதம் 18ம் நாள் தொடங்கி வைகாசி மாதம் 31 ம் நாள் முடிய நடைபெறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவிற்கு வைகாசி 23, 24 வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெறும். நமது எழுகரை நாட்டுச் செங்குந்த முதலியார்கள் மண்டபக்கட்டளைக்கும், செங்குந்தர்கள் திருப்பணி செய்த தங்க சப்பரம் வெள்ளி யானை வாகனத் திருவீதி உலாவிற்கும், அபிஷேக அலங்கார திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் உற்சவ அறக்கட்டளை நடைபெறும்.
6-ம் திருவிழா மண்டபக்கட்டளை நிகழ்ச்சிநிரல்
வைகாசி 23, இரவு 7.00 மணி அளவில் நாடழைத்தல், வைகாசி 24, பகல் 12.00 மணி அளவில் தொடங்கி நமது செங்குந்த முதலியார்கள் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.
வைகாசி மாதம் 24, மாலை 3.00 மணிக்கு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வெள்ளி யானை வாகனத்தின் மீது தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி நமது உறவின்முறையார்கள் புடைசூழ திருவீதி உலா வருதல் மாலை 4.00 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் திருமுலைப்பால் உற்சவமும், பட்டம் பரிவட்டம் கட்டும் அறக்கட்டளையும் நடைபெற்று, பட்டம் பரிவட்டம் கட்டப்பட்ட அனைத்து எழுகரை (ஏழு நாடு) மற்றும் அதன் மேலூர் கீழூர் கிராமங்களின் நாட்டாண்மைக்காரர்கள் மற்றும் பெருதனக்காரர்களிடம் நமது திருச்செங்கோடு பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நமது உறவின்முறையார்கள் நல்வாக்குகள் ஆசீர்வாதம் பெற்று மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகள் நிறைவுபெறுதல்.
• திருச்செங்கோடு செங்குந்த முதலியார்கள் கொடியேற்றம் மண்டகப்படி கோவில்கள் - அர்த்தநாரீச்சுரர், நிலட்டம்பிரான் கைலாசநாதர் கோவில், பரிமளவல்லித் தேவி யார், செங்கோட்டு வேலவர், மலை அடிவாரம் ஆறுமுக சுவாமி.
• கயிலாயநாதர் ஆலயத்தில் நடந்துவரும் பிரதோஷத்தன்று காப்பரிசி வழங்கும் கட்டளையை செங்குந்தர்கள் செய்கிறார்கள்.
• V.V.C. இராமலிங்க முதலியார் அவர்களால் உபயமாகச் செய்து வைக்கப்பெற்ற பிரதோஷ வெள்ளி வாகனத்தின்மீது உமாமகேச்சுரரை எழுந்தருள்விக்கும் கட்டளை.
![]() |
| திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் சூரசம்ஹாரம் மண்டகப்படி - செங்குந்த முதலியார் |
எழுகரை நாடு தலைமை திருச்செங்கோட்டை சேர்ந்த புகழ்பெற்ற செங்குந்த முதலியார்கள்:
ராவ் சாஹிப் V.V.C.V. நடேச முதலியார் : பிரெஞ்சு போர்ட் பிரசிடெண்ட், திருச்செங்கோடு தாலுக்கா போர்ட் தலைவர், சேலம் ஜில்லா போர்டு உறுப்பினர். (கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
கல்விதந்தை மீனாட்சிசுந்தரம் முதலியார் : ஈரோடு முன்னாள் நகர்மன்றதலைவர், பெண்கள் கல்வி பெற பாடுபட்டவர், செங்குந்தர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய இச்சமூகத்தைப் பொதுப் பட்டியலில் இருந்து பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்த சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டவர். ஈரோடு சென்னிமலை குருசாமிபாளையம் 3 செங்குந்தர் பள்ளிகள் உருவாக காரணமாக இருந்தவர்.ஈரோடு நகர்மன்றத் தலைவராக பணியாற்றி தனது சொந்த செலவில் கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என உயில் எழுதி வைத்தவர். இவர் பூர்வீகம் திருச்செங்கோடு உலகப்பம்பாளையம்.(வடுவன் கோத்திரம்)
சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர். சுந்தரம் முதலியார்: தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர். ஐந்து முன்னாள் முதல்வர்களுக்கு முதலாளியாக இருந்தவர். தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். இவரின் பூர்விகம் திருச்செங்கோடு.(கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம்)
சைவப்பெருவள்ளல் வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் : நூற்றுக்கும் மேற்பட்ட கோவில், கல்வி நிலையங்களை புதுப்பிக்க நிதி அளித்தவர்.ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர்.பழனி முருகன் கோவிலுக்கு வின்ச் ரயில், தங்கத்தேர், வைரவேல், தங்க மயில் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியவர்.பழனியில் செங்குந்தர் தர்ம பரிபாலன சபை நிறுவியவர். திருச்செங்கோடு வைகாசி திருவிழா செங்குந்தர் மண்டகபடிக்கு தங்க சப்பாரம் சமர்ப்பணம் செய்தார். (கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம்)
டி.பி. ஆறுமுகம் முதலியார்.,exMLA : திருச்செங்கோடு செங்குந்தர் கலை கல்லூரியின் நிறுவனர், எழுகரை நாட்டு செங்குந்தர் சமூக நட்டாண்மைக்காரர் மற்றும் திருச்செங்கோடு முதல் நகர்மன்றத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.),இவரின் பெயரில் தான் திருச்செங்கோடு பேருந்து நிலையம் உள்ளது.(வீரபத்திரன் கோத்திரம் பங்காளிகள்)
டி.ஏ. ராமசாமி முதலியார் : ராஜா சைசிங், ராஜா அரிசி ஆலை, வர்க்ஷா உலகளாவிய பள்ளி, டி.ஏ.ராமசாமி முதலியார் திருமண மண்டபம். (வீரபதிரன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்)
திருவேங்கடம் முதலியார் : குட்டி நூற்பு ஆலை, செங்குந்தர் நூற்பு ஆலை, குட்டி சைசிங் மில், திருச்செங்கோடு ஜோதி தியேட்டர்கள் நிறுவனர். வீரபத்திரன் கோத்திரம்
வி.வி.சி.ஆர் வையபுரி முதலியார் : புள்ளிகார் நூற்பு ஆலை நிறுவியவர் (சேலம், நாமக்கல் மாவட்டத்தில் முதல் நூற்பு ஆலை). (கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
வி.வி.சி.ஆர். கந்தப்ப முதலியார்: திருச்செங்கோடு யூனியன் முதல் சேர்மன்.(கரிச்சிபாளையம் புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
M.P.R. அர்த்தநாரி முதலியார் :திருச்செங்கோடு நகராண்மைக் கழகத்தின் முதல் தலைவர். 1958 ஆண்டில் முதன்முதலில் திருச்செங்கோடுக்கு காவேரி குடிநீர் கொண்டு வந்தவர். முதலில் மின்சாரம் கொண்டுவந்தவர். அரிசி பங்களாக்களில் குழந்தைகளுக்கு இலவச பால்/ பெரியவர்களுக்கு அன்னதானம் செய்தவர். வீரவேல் கோத்திரம்
பச்சியண்ண முதலியார்: திருச்செங்கோடு ஊராட்சியின் முதல்தலைவர். (வீரவேல் கோத்திரம் பங்காளிகள்)
தியாகி K.A.காசிவிஸ்வநாத முதலியார்: சுதந்திரப் போராட்ட வீரர், மகாத்மா காந்தி கோவில் கட்டியவர். நெசவாளர்களின் காவலர். (ஞானபண்டிதன் கோத்திரம்)
ஜான்சன் டி. எஸ். நடராஜன் முதலியார்: தொழிலதிபர், ஜான்சன் குரூப்ஸ் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சபை முன்னாள் நாட்டாண்மை, திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி குழுமத்தின் தலைவர்.(சிங்காரவேல் கோத்திரம்)
பி. செங்கோட முதலியார்: இராஜாகவுண்டம்பாளையம் புதிதாக 4 பாவடிகளை உருவாக்கி செங்குந்த முதலியார்கள் குடியேற வைத்தவர், முத்துகுமார் சாமி கோவிலை சீரமைத்தவர். ஜெயா தியேட்டர், செங்கோட முதலியார் சைசிங், செந்தில்ராஜா பஸ் சர்வீஸ் போன்ற நிறுவனங்களின் நிறுவனர்.(சமுதிரப்பாளையத்தார் கோத்திரம்)
VVCRM. சண்முகவடிவேல் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். (புள்ளிக்காரர் கோத்திரம் பங்காளிகள்)
V.S. அங்கப்ப முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
S.V.S. கார்த்திகேயன் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் தற்போதைய அறங்காவலர். எழுகரை நாடு செங்குந்த முதலியார் நாட்டாண்மை. (வஜ்ரவேல் கோத்திரம்)
இ. வேலாயுத முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். 1925களில்
டி.ஆர். பெருமாள் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். 1957களில்
டி.சி. செங்கோடன் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். 1971களில்
டி.சி. அண்ணாமலை முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர். இவர் காலத்தில் திருச்செங்கோடு தேருக்கு இவர் முயற்சியால் இருப்பு சர்கரங்கள் பொருத்தப்பட்டது. வீரவேல் கோத்திரம்.
முரசொலி முத்து: அதிக ஆண்டுகள் திருச்செங்கோடு திமுக நகர செயலாளர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
செங்குந்தர் சமூகம் அவர்கள் வாழும் பகுதிகளை தங்கள் தொழில் மற்றும் நிர்வாக வசதிக்காக 72 நாடுகளாக பிரித்தனர். அதில் திருச்செங்கோடு நகரம் எழுகரை நாடு என்ற பகுதியில் வரும்.
![]() |
| எழுகரை நாடு செங்குந்தர் பஞ்சாயத்து சபை |
![]() |
| 16ஆம் நூற்றாண்டு ராசிபுரத்தை ஆண்ட சின்னான் முதலியார் கட்டிய அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைப்பாதை மண்டபத்தில் வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் சிற்பம் |
![]() |
| அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் சூரசம்ஹாரம் எழுகரை நாடு செங்குந்தர் மண்டகப்படி செங்கோட்டு வேலருடன் வீரபாகு உள்ளிட்ட செங்குந்தர் நவ வீரர்கள் |
திருச்செங்கோடு வடக்கு ரத வீதி செங்குந்தர் மடம் நெல்லு குத்தி மண்டபத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான முருகன், வீரபாகு செங்குந்தர், உள்ளிட்ட நவவீரர்கள் சிற்பம்.
![]() |
| திருச்செங்கோடு எழுதரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து மாளிகையில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு நாட்டுப் பிள்ளையார் |
![]() |
.4 ஆம் திருவிழாவிற்கு இன்று அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகள் பட்டினப் பிரவேசத்தை முன்னிட்டு நமது செங்குந்தர் மண்டபத்தில் சுவாமிகளை வரவேற்கும் ஏற்பாடுகள் |
![]() |
| திருச்செங்கோடு எழுகரைநாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து மாளிகையில் உள்ள நமது செங்குந்தர் குலச் சின்னம் |
![]() |
| இராசிபுரம் மன்னர் சின்னான் முதலியார் 450 வருடம் முன்பு கட்டிய திருச்செங்கோடு மலை பாதை மண்டபத்தில் நபவீரரகள் சிலை |
![]() |
| வடக்கு ரதாவீதி நவாவீரர் சிலை உள்ள செங்குந்தர் மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் அபிசேகம் |
![]() |
| நமசிவாய முதலியார் வழங்கிய வெள்ளி யானை |
![]() |
| சைவபெருவள்ளல் VVCR முருகேச முதலியார் வழங்கிய தங்க சப்பரம் |
![]() |
| திருச்செங்கோடு எழுகரைநாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து நாட்டாண்மைக்காரர்கள். காரியக்காரர்கள் மற்றும் உறவின்முறையர்கள் முன்னிலையில் செங்கோட்டுவேலவர் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம் |
![]() |
| 6 ஆம் நாள் வெள்ளியானை வாகனம் செங்குந்தர் குல நமச்சிவாய முதலியார் அவர்களால் உபயமாக அம்மையப்பனுக்கு வழங்கப்பட்டது. |
![]() |
| எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பாக தைப்பூச விழா |
![]() |
சூரன் உடல் அற வாரி சுவரிட வேலை விட்ட கந்தக் கடவுளின் சூரசம்ஹார விழா
இன்று ஆயிரக்கணக்கான இறையன்பர்கள் புடைசூழ முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள்
வழிவந்த திருச்செங்கோட்டில் செங்குந்தர் சமுதாயத்தினரால் நடத்தப்பட்டது.
![]() |
| திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுமுகசாமி கோவிலில் பின் புறத்தில் (முடி காணிக்கை செலுத்தும் இடம் அருகில்) உள்ள செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து கோவில் |
![]() |
| முன்னாள் எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சபை நாட்டாண்மை தலைவர் மக்கள் சேவகர் T.P.ஆறுமுகம்.exMLA அவரின் பெயரில் திருச்செங்கோடு பேருந்து நிலையம் உள்ளது. |
![]() |
| திருச்செங்கோடு கோவில் அறங்காவலர் அங்கப்ப முதலியார் மற்றும் V.V.C.R.M. சண்முகவடிவேல் முதலியார் போன்றவர்கள் |
![]() |
| 1996 MLA வாக வெற்றி பெற்ற T.P. ஆறுமுகம் முதலியார் பாராட்டு விழா |
![]() |
| திருச்செங்கோடு செங்குந்தர் முத்துகுமாரசாமி கோவில் கல்வெட்டு |
![]() |
| செங்குந்தர் கல் மண்டபம் இருந்ததை செங்குந்தர் கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது. |
![]() |
| எழுகாரை நாடு செங்குந்த முதலியார் நாட்டாண்மை சபையில் நடுவில் உள்ள ஒட்டக்கூத்தர் முதலியார் படம். |
![]() |
| 1982 எழுகரை நாடு செங்குந்த முதலியார் நாட்டு குருக்கள் சதாசிவ குருக்கள் பட்டாபிஷேகம் செய்துவைத்து எழுகரை நாடு செங்குந்தர் நாட்டாண்மை, காரியகாரர்கள் |
![]() |
| திருப்பூர் குமரன் நினைவாக கட்டப்பட்ட குமரன் கல்வி நிலையம் |
![]() |
| 1940 களின் நாட்டாமை |
![]() |
| கோவில் அறங்காவலர்கள் VVCRM சண்முகவடிவேல் முதலியார் & அங்கப்பா முதலியார் |
![]() |
| வைகாசி தேர் திருவிழா செங்கோட்டு வேலர் தேருக்கு துணி கொடுக்கும் உரிமை |
![]() |
| இராஜகவுண்டம்பாலையம் செங்கோட முதலியார் அவர்கள் நடத்திய திருவிழா |
![]() |
| அத்தனூர் செங்குந்த முதலியார் |
![]() |
| சூரியம்பாளையம் பாவடி செங்குந்தர்கள் |
![]() |
| திருச்செங்கோடு தேற்களுக்கு துணி அலங்காரம் பொருள்களை தொன்று தொட்டு வழங்கிவரும் செங்குந்த முதலியார்கள் |
சேலம் நாடு செங்குந்த முதலியார்கள்.
![]() |
| J |
![]() |
| ராசிபுரம் நாடு பாச்சல் பாவடி செங்குந்த முதலியார் |
| காளிப்பட்டி பாவடி செங்குந்தர் |


.jpeg)

















.jpg)






.jpg)

.jpg)

.jpg)





















































.jpg)
























































